தயவுசெய்து நீங்களாவே போய்ருங்க.., புஜராவிர்க்கு பதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 5 வீரர்கள்..
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதால் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் எந்த வீரரை தேவை இல்லாமல் இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது என்றும், இந்திய அணியின் கேப்டன் செய்த தவறு என்னவென்பது குறித்தும், தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு குறித்தும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா மிக மோசமாக விளையாடி இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக பார்க்கப்படுவதால், அவரை இந்திய அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் வேறொரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கிரிக்கெட் பட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
அப்படி ஒருவேளை புஜாரா டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதில் மூன்றாவது பேட்டிங்கில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து பார்ப்போம்.
ஷ்ரேயாஸ் ஐயர்.
தற்பொழுது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் புஜாராவிற்கு பதில் மூன்றாவது பேட்டிங் ஆர்டரில் களமிறங்குவதற்கு தகுதியான வீரர்களின் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார்.
இதுவரை பத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம் ஐந்து அரை சதம் உட்பட 666 ரன்கள் அடித்து நல்ல ஆவரேஜ் மெயிண்டைன் செய்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவிற்கு பதில் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியான வீரர் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதனால் ஒருவேளை புஜாரா அணியிலிருந்து நீக்கப்பட்டால் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.