ஆசிய கோப்பைக்கு பிறகு ஓய்வுபெற வாய்ப்புள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்கள்
இளம் வீரர்கள் பலரின் வருகையில் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு தொடருக்கும் பல மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கிறது.
இதனால் யுவராஜ் சிங் போன்ற சீனியர் வீரர்கள் பலர் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் நீண்ட காலமாக தவித்து வருகின்றனர். இதே போல ஒவ்வொரு அணியில் ஓன்றிரண்டு சீனியர் வீரர்கள் தனது அணியில் இடம்பெற முடியாமல் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இப்படி காத்திருக்கும் பல வீரர்கள் எப்படியாவது அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது இடம்பெற்றுவிட வேண்டும் என்று காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியில் இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1; யுவராஜ் சிங்;
கடந்த சில வருடங்கள் முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த யுவராஜ் சிங், கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாகவே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்.
2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அந்த தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் யுவராஜ் சிங் கைகொடுத்திருந்தாலும், இவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருப்பது காலத்தின் கட்டாயமே.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்க இன்னும் ஒரு வருட காலம் உள்ளதால் யுவராஜ் சிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.