இந்த வருடத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற காத்திருக்கும் ஐந்து வீரர்கள் !!


சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து 2021இல் தனது ஓய்வு அறிவிக்கும் 5 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.


5.ஜோ பர்ன்ஸ்
ஆஸ்திரேலிய அணியை சார்ந்த தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் தனது கிரிக்கெட் கேரியரில் பல சாதனை படைத்துள்ளார். காயம் காரணமாகஇவரால் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற முடியவில்லை.

கடைசியாக விளையாடிய போட்டியில் சிறப்பாக
செயல்படாததால் அணியிலிருந்து கைவிடப்பட்டார். 2021 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


4.கேதர் ஜாதவ்
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான கேதர் ஜாதவ் வலதுகை பேட்ஸ்மேன். இவர் மிடில் ஆர்டர்களில் அணிக்கு ரன்களைக் குவிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.இவர் இந்திய அணிக்காக பல முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் சரியான பார்ம் இல்லாததன் காரணமாக 2021ல் இருந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.


3.ஃபப் டு பிளசிஸ்.
சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரரான டு பிளசிஸ் தற்போது நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடித்து அசத்தினார்.பல முறை தனது அணிக்காக இக்கட்டான நிலையிலும் ரன்களை குவித்து அணியின் வெற்றியை தீர்மானித்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2021 ஓடு ஓய்வை அறிவிப்பேன் என ஹின்ட் கொடுத்துள்ளார்.


2.முகமது ஹபீஸ்.
பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆன முகமது ஹபீஸ் பாகிஸ்தான் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார்.டி-20 போட்டிகளிலேயே அதிகம் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.40 வயதாகும் இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டார்.

2021ல் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பையை தனது அணிக்கு மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முனைப்போடு உள்ளார். அத்துடன் தனது கிரிக்கெட் வரலாற்றில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


1.ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 600 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இவர் கிரிக்கெட் உலகின் பல ஜாம்பவான்களையும் தனது பந்து வீச்சின் மூலம் திணற செய்தார்.

காயம் காரணமாக சில போட்டிகளில் இவரால் பங்கெடுக்க முடியவில்லை. இவர் 2021 இல் தனது ஓய்வை அறிவித்தார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Mohamed:

This website uses cookies.