ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட் வீழ்த்திய 5 வீரர்கள் ! இதில் நம் அஸ்வினும் ஒருவர் !

ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட் வீழ்த்திய 5 வீரர்கள் ! இதில் நம் அஸ்வினும் ஒருவர் !

கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் பல்வேறு கனவுகளுடன் விளையாடி வருகின்றனர். அந்தவகையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளில் விளையாட பல வீரர்கள் ஆசைபடுகிறார்கள். ஆனால் டெஸ்ட் போட்டியில் நிலைத்து விளையாடுவதும் என்பது சாதாரண விசயம் கிடையாது.

ஏன்றென்றால் இந்த இரண்டு போட்டிகளை விட டெஸ்ட் போட்டி மிகவும் வித்தியாசமாக இருக்கும் மற்றும் சவாலாக இருக்கும். ஆனால் ஒருசிலர் டெஸ்டில் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்களை வீழத்திய ஐந்து ஆல்ரவுண்டர்களை பற்றி பார்போம். 

முதலில் இந்திய சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2016 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்ற போட்டியில் 113 ரன்கள் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சர் இயன் போத்தம் 1981ஆண்டு  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 149 ரன்கள் மற்றும் 6 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 

மூன்றாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் துணைகேப்டன் ரோஸ்டன் சேஸ் 2016 ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 137 ரன்கள் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான ஜாக் காலிஸ் 1999 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 110 ரன்கள் மற்றும் 6 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இறுதியாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் இம்ரான் கான் 1982-83 ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 117 ரன்கள் மற்றும் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.