1977 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஒருநாள் தொடர் சமகால நவீன கிரிக்கெட்டின் ஒரு முக்கிய தொடராக விளங்கி வருகிறது. டெஸ்ட் தொடர் போன்று ஐந்து நாட்கள் நடைபெறாமலும் டி20 போன்று 3 மணி நேரத்தில் முடியாமலும், 50 ஓவர்களை கொண்ட இந்த தொடர், ஒரு நாள் நடைபெறும். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒரு 50 ஓவர் போட்டியில் பேட்டிங்கில் சதமும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
திலகரத்னே தில்ஷன்
இலங்கை அணியின் முன்னாள் வெற்றிகர ஆல்ரவுண்டர் தில்சன் தான் விளையாடிய காலங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிக சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். மேலும் அதிரடியாக விளையாடி பலமுறை இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த தில்சன் ஒரே ஒருநாள் போட்டியில் சதம் மற்றும் 4 விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் 2011 உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 131 பந்துகளில் 144 ரன்கள் அடித்து அசத்தினார், அதில் 16 போர்களும் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பந்து வீசிய இவர் மிகச் சிறந்த முறையில் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தில்ஷன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.