1977 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஒருநாள் தொடர் சமகால நவீன கிரிக்கெட்டின் ஒரு முக்கிய தொடராக விளங்கி வருகிறது. டெஸ்ட் தொடர் போன்று ஐந்து நாட்கள் நடைபெறாமலும் டி20 போன்று 3 மணி நேரத்தில் முடியாமலும், 50 ஓவர்களை கொண்ட இந்த தொடர், ஒரு நாள் நடைபெறும். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் மிகக் குறுகிய காலத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
இமாம்-உல்-ஹக்
25 வயதே ஆகும் பாகிஸ்தான் அணியின் இடது கை பேட்ஸ்மேன் இமாம் பாகிஸ்தான் அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார். மேலும் வருங்கால பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இவர் திகழ்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வலுவான அவர்களால் பாராட்டைப் பெற்ற இமாம்-உல்-ஹக் ஒருநாள் தொடர்களில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
இவர் 46 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2023 ரன்களை அடித்துள்ளார் அதில் ஏழு சதங்களும் பத்து அரை சதங்களும் அடங்கும் மேலும் இவர் அதிகபட்சமாக 151 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.