ரோகித் சர்மாவிற்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த வருடம் தான் அற்புதமான வருடமாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து வந்த அணிகளை எல்லாம் அடித்து துவம்சம் செய்தார் ரோகித். இலங்கை மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் அங்கு மட்டும் 5 போட்டிகளில் 3 சதம் விளாசினார். அப்படியே அடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மீண்டும் இலங்கை என அனைத்து அணிகளையும் ஒரு கை பார்த்துவிட்டார் ரோகித். அதற்கு முன்னர் சாம்பியன்ஸ் கோப்பையிலும் மாஸ் பண்ணிவிட்டு தான் இங்கு வந்தார்.
இந்த வருடம் பல சாதனைகளை புரிந்துள்ளார் ரோகித். அவற்றில் முக்கியமான 5 சாதனைகளை தற்போது பார்ப்போம்.
5.அதிக 150+ ஸ்கோர் அடித்த வீரர்
தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதம் அடித்துள்ளார் ரோகித். எந்த இரு வீரரும் 3 இரட்டை சதங்கள் எல்லாம் அடிக்கவில்லை. ரோகித் இந்த மூன்றாவது இரட்டை சத்தின் மூலம், மொத்தம் ஐந்து 150 ஸ்கோர் அடித்து சச்சின் மற்றும் வார்னருடன் அந்த பட்டியலில் இணைந்தார்
ஒருநாள் போட்டிகளில் அதிக 150+ அடித்த வீரர்கள் பட்டியல்
1.சச்சின் – 5
2.வார்னர் – 5
3.ரோகித் – 5
4.கிறிஸ் கெய்ல் – 4
5.ஜெயசூர்யா – 4