கிரிக்கெட் வரலாற்றில் எவ்வளவு பெரிய சிறந்த வீரராக இருந்தாலும் ஐசிசி யால் நடத்தப்படும் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை வெல்ல முடியவில்லை என்றால் அது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணி கேப்டன்களின் முக்கிய குறிக்கோள் ஐசிசியால் நடக்கும் உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே.அதில் தோல்வியுறும் பட்சத்தில் அவருடைய கனவு முழுமையாக நிறைவு பெறாது. அந்த அளவுக்கு ஐசிசியால் நடத்தப்படும் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.
இந்நிலையில் ஐந்து சிறந்த கேப்டன்களால் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
1.மகிளா ஜெயவர்தனே
இலங்கை அணியின் ஜாம்பவானான மகிளா ஜெயவர்தனே ஒரு அதிரடி பேட்ஸ்மேன். இவர் இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளிலும், 448 ஒருநாள் போட்டிகளிலும் 55 மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 30,000 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார்.
இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் இலங்கை அணிக்காக 38 டெஸ்ட் போட்டியிலும் 126 ஒருநாள் போட்டியிலும் 19 டி20 போட்டியிலும் தலைமை ஏற்று அணியை வழி நடத்தியுள்ளார். இவர் பல போட்டிகளில் தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து இருந்தாலும் இவரால் ஒரு முறை கூட உலக கோப்பையை தனது அணிக்கு எடுத்துக் கொடுக்க முடியவில்லை.
2.கிரீம் ஸ்மித்
சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் இதுவரை 108 டெஸ்ட் போட்டி, 149 ஒருநாள் போட்டி மற்றும் 27 20 போட்டிகளில் தலைமை ஏற்று 53 டெஸ்ட் போட்டியிலும் 92 ஒருநாள் போட்டியிலும் 18 டி 20 போட்டிகளிலும் தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
இருந்தபோதும் இவரால் ஒரு முறை கூட தனது அணிக்காக உலக கோப்பையை பெற்று தர முடியவில்லை.
3.இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானான இன்சமாம் உல் ஹக் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். உலகின் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் பயப்படும் அளவிற்கு இவருடைய பேட்டி மிக அதிரடியாக இருக்கும்.2001 முதல் 2007 வரை பாகிஸ்தான் அணிக்காக தலைமை ஏற்ற இவர் பல போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். இவர் தனது கேப்டன்ஷிப் பில் பல சாதனைகளை படைத்து அனைவரையும் வியக்க வைத்தார். இருந்தபோதும் இவரால் ஒரு முறை கூட உலக கோப்பை எடுக்க முடியவில்லை.
2.ஏபி டிவில்லியர்ஸ்.
மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் இது வரை 114 டெஸ்ட் போட்டிகளில் 228 ஒருநாள் போட்டிகளிலும் 78 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் சர்வதேச அரங்கில் இதுவரை 20,000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் மூன்று டெஸ்ட் போட்டியிலும்103 ஒருநாள் போட்டிகளில் 18 டி20 போட்டிகளில் தலைமை ஏற்று அணியை வழி நடத்தினார். அதில் 2 டெஸ்ட் போட்டி,59 ஒருநாள் போட்டி மற்றும் 8 டி20 போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இருந்தபோதும் இவரால் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு முறை கூட கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை.
5.விராட் கோலி.
இந்திய அணியில் தற்போதைய கேப்டனான விராட் கோலி அணியை சிறப்பாக வழி நடத்தி பல சாதனைகளைப் படைத்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
இதுவரை 56 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்று 33 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்,அதேபோன்று 92 ஓடி போட்டிகளில் தலைமை ஏற்று 63 போட்டிகளில் வெற்றியை கொடுத்துள்ளார்.மேலும் 40 டி20 போட்டிகளில் பங்கேற்று 24 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார்.
ஆனால் இவரால் இதுவரை இந்திய அணிக்கு ஐசிசியால் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை .இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த ஒரு விமர்சனத்தையும் சரிசெய்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று பலராலும் நம்பப்படுகிறது