2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது, இன்னிலையில் சமீபமாக நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிண்டு ஹசரங்காவை ஐந்து அணிகள் தனது அணியில் இணைப்பதற்கு திட்டம் தீட்டி வருகிறது.
2021 ஐபிஎல் தொடர் கொரோன அச்சுறுத்தலின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மீதமுள்ள போட்டி வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2022 ஐபிஎல் ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானதால் எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த வீரர்களை புதிதாக அணியில் இணைக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகின்றனர்.
ஐபிஎல் விதிப்படி ஒரு அணி இரண்டு வெளிநாட்டு வீரர்களை, 2 உள் நாட்டு வீரர்களும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளலாம்அல்லது மூன்று உள்நாட்டு வீரர்களை ஒரு வெளிநாட்டு வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் எந்த வீரர்களை தனது அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐசிசி உலக தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவை எடுக்க திட்டமிட்டிருக்கும் ஐந்து அணிகள் பற்றி இங்கு காண்போம்.