கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பது சில அணி வீரர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1879ல் இருந்து விதிகள் வகுக்கப்பட்டு விக்கையாடப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் விக்கையாட்டில் எண்ணற்ற நேர்மையான சம்பவங்களும், அற்புதமாக பல நல்ல நிகழ்வுகளும் நடந்துள்ளது. டெஸ்ட் போட்டிகல் 10 நாள் நடந்த வரலாறுகள் எல்லாம் உள்ளது.
ஆனால், அவற்றில் எல்லாம் எதிரணிய நேரடியாக திட்டி கவனத்தை சிதைப்பது, நேருக்கு நேர் வார்த்தைகளால் சாடிக்கொள்வது என பல சம்பவங்கள் அனைத்தும் நேர்மையாக நடைபெற்றாலும், சில அணிகள் அது போன்று நேரடியான போட்டிகளில் முடியாத பட்சத்தில் குறுக்கு வழிகளை கையாண்டு போட்டியை ட்ரா செய்வது, போட்டியை ரத்து செய்வது, ஆட்டத்தை பல நிமிடங்கள் நிறுத்தி ஒரு நல்ல வழியை கையாலாமல் இப்படியாகி சிக்கெட் எடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறது.
அதில் கைதேர்ந்த அணி தான் இலங்கை. கடந்த பல வருடங்களில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் ஏமாற்றி வெற்றியை தேட முயற்சித்துள்ளது இலங்கை அணி.
அவற்றில் இலங்கை அணி இந்தியாவை மட்டும் ஏமாற்றிய 5 சம்பவங்களை இங்கு தொகுத்துள்ளோம்.
1.கங்குலியை சதமடிக்க விடாமல் தடுக்க செய்த ஏமாற்று வேலை
2001ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. மேலும் கேப்டன் கங்குலி 98 ரன்னில் இருந்தார் , மறுமுனையில் கைப் இருந்தார் சிங்கில் அடித்து கேரன் கங்குலி சதம் அடிக்க ஸ்ட்ரைக்கை மாற்றி விட நினைத்தார் முகமது கைப்.