ஐபிஎல் ஏலம் 2018: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அதிகம் அறியப்படாத 5 வீரர்கள்!

CHRISTCHURCH, NEW ZEALAND - JANUARY 25: Mujeeb Zadran of Afghanistan (R) is congratulated by team mates after dismissing Jakob Bhula of New Zealand during the ICC U19 Cricket World Cup match between New Zealand and Afghanistan at Hagley Oval on January 25, 2018 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer-IDI/IDI via Getty Images)

ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் ஆச்சரியங்கள் நிகழும். அதாவது அறிமுகம் அதிகம் இல்லாத வீரர்கள் பெரிய அளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள். 2018 ஏலமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட 5 அதிகம் அறியப்படாத வீரர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2கோடிக்கு ஏலம் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மே.இ.தீவுகளைச் சேர்ந்த வீரர், இந்தியாவின் இஷான் கிஷன் (ரூ.6.2 கோடி), டார்சி ஷார்ட் (ரூ.4 கோடி), கவுதம் (ரூ.6.2 கோடி), முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.4 கோடி.)

1.ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ஜோஃப்ரா ஆர்ச்சர், இவர் 22 வயது மே.இ.தீவுகள் வீரர். பிக்பாஷ் லீக் பார்ப்பவர்களுக்கு இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் என்பது தெரியும். அறிமுகப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளுடன் மெய்டன் ஓவர் வீசி அசத்தியவர். மணிக்கு 150 கிமீ வேகம் தொடும் வேகப்பந்து வீச்சாளர். அருமையான பீல்டர். நேரடியாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற தகுதி பெற்றவர்.

2.இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்)

இந்தியாவின் மிகச்சிறந்த இளம் விக்கெட் கீப்பர் ஜார்கண்ட் பேட்ஸ்மென் என்று இஷான் கிஷனை விதந்தோதுகின்றனர். டெல்லிக்கு எதிரான 2016-17 ரஞ்சி போட்டியில் 273 ரன்களை விளாசியவர், இதில் 14 சிக்சர்கள் அடங்கும். இவர் இடது கை பேட்ஸ்மென். உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இஷான் கிஷனின் ஸ்ட்ரைக் ரேட் 145.98% என்பது குறிப்பிடத்தக்கது.

3.டார்ஸி ஷார்ட் (ராஜஸ்தான் ராயல்ஸ். ரூ.4 கோடி)

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீக் வீரர். தொடக்க வீரர். நல்ல ஸ்ட்ரைக் ரேட். நல்ல தரமான பீல்டர், ரிக்கி பாண்டிங் இவரைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். பிக்பாஷ் லீகில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சாதனைக்குரியவர் ஷார்ட். பிபிஎல் வரலாற்றில் இவர் பிரிஸ்பன் ஹீட்டுக்கு எதிராக அடித்த 122 ரன்கள் பிபிஎல் சாதனையாகும்.

4.கே.கவுதம் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

29 வயதான கவுதம் கர்நாடகா அணிக்கு ஆடுபவர். ஆஃப் ஸ்பின்னர். ஆல் ரவுண்டர். டி20 பேட்ஸ்மெனாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 159.79

5.முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

ஆப்கானின் புதிர் வீச்சாளர், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கூக்ளி, கேரம் பந்து, இவருக்கு வயது 16தான், ஆனால் அதற்குள் இவர் ஒரு அஜந்தா மெண்டிஸ் விளைவை ஏற்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பரில் ஆப்கான் அணிக்காக ஒருநாள் சர்வதேச அறிமுகப் போட்டியில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Editor:

This website uses cookies.