வீடியோ ; ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த கிரிஸ் கெய்ல் ; அதிர்ந்து போன பந்துவீச்சாளர் !!

வீடியோ ; ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த கிரிஸ் கெய்ல் ; அதிர்ந்து போன பந்துவீச்சாளர்

கனடா ப்ரீமியர் லீக்கில் கிரிஸ் கெய்ல் ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில், வான்கவுவர் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் விளையாடினார். முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய வான்கவுவர் அணியில் கிறிஸ் கெயில் அதிரடி காட்டினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் பந்துவீச்சாளர்களை மிரட்டினர். பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13வது ஓவரை கெயில் வெளுத்து வாங்கினார்.

முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய அவர், அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரில் விளாசினார். அத்துடன் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து அந்த ஓவரை பதம் பார்த்துவிட்டார். அவர் 44 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கெயில் அதிரடியால் அவரது அணியும் வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் 122 ரன்கள் குவித்த கெயில், இந்தப் போட்டியில் 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Mohamed:

This website uses cookies.