2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சென்ற ஆண்டு வரை மொத்தமாக 13 ஆண்டுகள் மிக சிறப்பாக ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 14வது சீசனாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் பாதியில் குறைவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வைத்து நடத்தவும் பிசிசிஐ முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே விளையாடுவார்கள். 20 ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் முடிந்தவரை அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடவே ஆசைப்படுவார்கள். எனவே தங்களுடைய விக்கெட் போனாலும் பரவாயில்லை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விளையாடுவார்கள். ஐபிஎல் தொடரில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இறுதி வரை அவுட் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் தற்போது வரை அதிக முறை அவுட் ஆகாமல், ஆட்டத்தில் கடைசி வரை நீடித்த கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.
ஏபி டிவில்லியர்ஸ் – 38 முறை
ஏபி டிவிலியர்ஸ் 2011ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். 162 இன்னிங்ஸ்களில் இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 50506 ரன்கள் அவர் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 40.77.
மொத்தமாக மூன்று சதங்கள் மற்றும் 40 அரைசதங்களை இதுவரை அவர் குவித்து இருக்கிறார். 162 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் தற்பொழுது வரை 38 தடவை கடைசிவரை அவுட்டாகாமல் மைதானத்தில் நின்று இருக்கிறார்.