அணியில் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்; விழி பிதுங்கும் கிரிக்கெட் வாரியம்! போட்டிகள் நடக்குமா?

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளதால் அதன் கிரிக்கெட் வாரியம் செய்வதறியாது திகைத்துள்ளது .

53 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இதற்காக ஏற்கனவே நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட நான்கு முறை பரிசோதனை செய்த பிறகே பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து அனுப்பப்பட்டனர்.

அங்கு தனிமைப்படுத்தி இருக்கும் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் இருவர் ஏற்கனவே கொரோனா இருந்து குணமடைந்தவர்.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேர் முடிவு பாசிட்டிவ் என வந்திருக்கிறது. அவர்கள் மற்ற இடத்தில் இருந்து முற்றிலுமாக தனிமையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இதன் சில வீரர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த தகவல் சுகாதார அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய ஆய்வு நடத்தி உண்மை நிலை கண்டறியப்பட்ட பிறகு கொரோனா வந்த வீரர்கள் முற்றிலுமாக இயல்புநிலை பயிற்சிக்கு திரும்புவர் எனவும் தெரிய படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில் தனிமைப்படுத்துதல் இன் முதல் நாளில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறி இருக்கின்றனர். நியூசிலாந்து வந்திருக்கும் வீரர்கள் நல்லவிதமாக விளையாட்டை முடித்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என எச்சரிக்கையும் கோரிக்கையும் விடுக்கிறோம். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கவேண்டும். இன்னொருமுறை வீரர்கள் இந்த கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் ஒட்டுமொத்த கிடைக்க தொடரும் நிறுத்தப்பட்டு உடனடியாக பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்.” என அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.

Mohamed:

This website uses cookies.