2007 டி20 சாம்பியன்ஷிப் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ரோஃபி என்று மூன்று கோப்பைகளை இந்திய அணி வென்றது தோனியின் தலைமையில்தான். இந்திய அணியின் வெற்றிப் பட்டியல் நீண்டதும் தோனி கேப்டனாகப் பணியாற்றிய போது தான். இதுவே அவர் மிகவும் ஆற்றல் வாய்ந்த மனிதர் என்று சொல்வதற்கு போதுமானதாகும். இவரின் ஆளுமைத் திறன் மூலம் ஸ்டீஃபன் கோவே எழுதிய ஆற்றல் மிக்கவர்களின் 7 பழக்கங்கள் தோனிக்கு எப்படி பொருந்துகிறது என்பதையும், அதைப் பாடங்களாக நாமும் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் பல வெற்றிகளைக் குவிக்கலாம் என்பதை சொல்வதற்காகவுமே இந்தத் தொகுப்பு.
1.முன்யோசனையோடு செயலாற்றுங்கள்
எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு தேவை திட்டமிடல். திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றாலும் கவலைப்படாமல் அந்த காரியத்தை சாமர்த்தியமாக சமாளிக்க தேவை முன்யோசனை. தோனி தனது ஒவ்வொரு போட்டியிலும் அப்படி செயல்பட்ட காரணத்தினாலேயே வெற்றிகரமான கேப்டனாக வளம் வந்தார். மீடியாவுக்கு அளிக்கும் பேட்டிகளிலும் ரியாக்ட்டிவ்வாக பதில் அளிக்காமல் ப்ரோ-ஆக்ட்டிவாக செயல்பட்டதாலேயே அவர் கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டார்.
“விராட், ரோஹித் சர்மா, ரஹானே போன்ற வீரர்களை முதலில் பேட் செய்ய அனுப்பினால் ஸ்கோர் போர்டில் ரன்ஸ் குவிய நிறைய வாய்ப்பு உள்ளது. கடைசி இறங்கும் 4 ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் ஸ்டராங்காக இல்லாததால் இந்த மாற்றங்கள் தேவைப்படுகிறது” என்று இந்தியா- தென் அப்பிரிக்கா ஆட்டத்தின்போது தான் லேட்டாக களம் இறங்கியதற்கு விளக்கம் அளித்தார். இது போன்ற பல சம்பவங்களை அவரின் முன்யோசனை செயல்பாட்டிற்கு உதாரணமாக எடுத்து சொல்லலாம்.