ரிஷப் பன்ட்டிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது: கங்குலி

ADELAIDE, AUSTRALIA - DECEMBER 03: Rishabh Pant of India poses during the India Test squad headshots session at Adelaide Oval on December 03, 2018 in Adelaide, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது அவர் ஒரு அற்புதமான வீரர் இந்திய இந்திய அணியின் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய வீரராக வருவார் இந்த தொடரில் தற்போது வரை நன்றாக ஆடியுள்ளார் எதிர்காலத்திலும் நன்றாக ஆடுவார் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார் அவர்

எம்.எஸ்.தோனியுடன் , தினேஷ் கார்த்திக் மற்றொரு விக்கெட் கீப்பராக ஓடிஐ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 12 அன்று தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 23ஆம் நாள் தொடங்குகிறது.

ரிஷப் பண்ட் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். எனவே அவருக்கு தற்போது ஓய்வு தேவை. அதனால் தான் அவருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விக்கெட் கீப்பங்கில் சற்று கவனம் செலுத்தவும் இந்த ஒய்வு ஏதுவாக அமையும் என பிரசாத் கூறியுள்ளார்.

நாம் தற்காலத்தில் நிறைய வீரர்களை இந்திய அணியில் சோதித்து பார்த்து உள்ளோம். ஆனால் இளம் வீரர் ரிஷப் பண்ட் டி20 , டெஸ்ட் என இரண்டு கிரிக்கெட்டிலும் அருமையாக தனது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார்.

இவரிடம் உள்ள சிறு சிறு தவறுகளை சரிசெய்து நல்ல ஆட்டத்திறனுடன் ஒருநாள் தொடரிலும் இடம்பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரசாந்த்.

சிட்னி டெஸ்ட் தான் ரிஷப் பன்ட்-ன் கிரிக்கெட் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரசாந்த் கூறியதாவது , 21 வயதுடைய இளம் வீரர்களையே இந்திய அணி நிர்வாகம் அணியினுள் எடுக்க தற்போது திட்டமிட்டுள்ளது.

ரிஷப் பன்ட் அடித்த இரு டெஸ்ட் சதங்களும் அந்நிய மண்ணில் அடித்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரிஷப் பண்ட்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : ரோகித் சர்மா ( துனைக்கேப்டன்) , ஷிகார் தவான் , விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல். அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், பூம்ரா, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி , கலீல் அகமது.

Sathish Kumar:

This website uses cookies.