அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெறுவது இங்கிலாந்து தொடருக்கான நம்பிக்கையை கொடுக்கும் என ரோகித் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 2-வது வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் – ரோகித் சர்மா
இந்தியா – அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 61 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் தவான் 45 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய அயர்லாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெறும் வெற்றி இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை கொடுக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான சவாலான தொடர் எங்களுக்கு காத்திருக்கிறது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது.