6-0 !! முதன் முறையாக ஒரு வெற்றிகூட இல்லாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பும் ஆஸ்திரேலியா!!

இங்கிலாந்திற்கு எதிராக 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது ஆஸ்திரேலியா.

ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஈவுயிரக்கமின்றி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது. 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது.

டி20 போட்டியிலும் 222 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்து 193 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பலம் வாய்ந்த அணியாக திரும்புவோம் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐந்துமுறை உலகக் கோப்பையை முத்தமிட்ட ஒரு அணி. ஏழுமுறை உலககோப்பை இறுதி போட்டியில் விளையாடிய அணி. நீண்ட நாள் ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தை அலங்கரித்த அணி. கிரிக்கெட்டின் முகமாக பார்க்கப்படும் பிராட்மேன் என்ற ஜாம்பவனை கிரிக்கெட் உலகிற்கு தந்த அணி.

உலக அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் வென்ற அணி. தொடர்ந்து அதிக தொடர்களை வென்ற அணி, இப்படி ஈடு இணையற்ற பல சாதனைகளை தன் வசம் கொண்டு இருக்கும் ஒரு அணி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

“ஆஸ்திரேலியா” இந்த பெயர் கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத பெயர். பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் தனக்கென தனி அடையாளத்தையே உண்டாக்கிய அணி, தற்போது அப்படியே எதிர்மறையாக இருகிறது. அண்மையில் இங்கிலாந்துடன் நடந்தப் போட்டியில் ஐந்து போட்டியிலும் தோல்வியை தழுவி ஒரு கத்துக்குட்டி அணி விளையாடுவது போல இருப்பதாக பரவலான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்த தொடர் என்றால் அனைத்து அணிகளுமே ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை ஆரம்பிப்பார்கள். மற்ற அணிகள் காட்டிலும் ஆஸ்திரேலியா என்றால் கூடுதல் முக்கியதுவமும், பயமும், எதிர் அணி வீரர்களிடம் ஒட்டிக்கொள்ளும். இப்படி கிரிக்கெட் வானில் தனக்கான ஆதிக்கத்தை செலுத்திவந்த அணியில், ஸ்டீவ் வாக், பாண்டிங், வார்னே, கில்கிரிஸ்ட், ஹைடன், பிரட் லீ என இன்று நாம் ஜாம்பவான்களாக பார்க்கும் இவர்கள் விளையாடிய காலம் ஆஸ்யின் பொற்காலம்.

Editor:

This website uses cookies.