வெஸ்ட் இண்டீஸ் அணியில் தமிழர் வீராசாமி!!

பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மறுத்துவிட்டதால், இளம் அணியை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது வெஸ்ட் இண்டீஸ். அதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய போது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உட்பட 7 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை சேர்ந்த 7 பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்புப் பிரச்னைகளை காரணம் காட்டி, மற்ற நாடுகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத் துவருகின்றன. ஜிம்பாப்வே அணி மட்டும் அங்கு விளையாடியது. சமீபத்தில் அங்கு சென்ற இலங்கை அணியில் கூட முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.

’தங்கள் நாட்டில் பாதுகாப்பு பிரச்னை ஏதும் இல்லை’ என்று நம்ப வைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உட்பட 7 பேர் காயமடைந்தனர். மேலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை சேர்ந்த 7 பேர் பலியாயினர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மற்ற நாட்டினர் பாக்கிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் சமீபத்தில் ஜிம்பாப்வே அணி மட்டும் பாக்கிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இதனையடுத்து தங்கள் நாட்டில் பிரச்சனைகள் இல்லை எனவும், வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பாக்கிஸ்தான் தரப்பில் வலியுறுத்தி வரப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேற்கிந்தி தீவுகள் அணி பாக்கிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட விருப்பம் தெரிவிதுள்ளது எனினும், இந்த சுற்றுப் பயணத்தில் மூத்த வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கைமாறியுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தானில் மூன்று டி20 போட்டிகளில் விளையாட, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் கராச்சியில் நடத்தப்பட இருக் கிறது. இதற்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில், பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், தேவேந்திர பிஷூ ஆகியோர் விலகியுள்ளனர்.

3 டி20 போட்டிகள் கொண்ட இத்தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழக வம்சாவழியை சேர்ந்த வீராசாமி பெருமாள் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்னதாக அந்நாட்டின் U19 அணியில், உள்ளூர் போட்டிகள், சில சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

இரண்டாம் கட்ட இளம் வீரர்களை, ஜேசன் முகமது தலைமையில் அந்நாடு பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இதில் ஆண்ட்ரே மேக்கர்த்தி, ஓடியன் ஸ்மித் ஆகிய புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீராசாமி பெருமாள் என்ற வீரரும் இடம்பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

அணி விவரம்:
ஜேசன் முமகது (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ராயட் எம்ரிட், பிளட்சர், மேக்கர்த்தி, கீமோ பால், வீராசாமி பெருமாள், பாவெல், தினேஷ் ராம்தின், சாமுவேல்ஸ், ஓடியன் ஸ்மித், சட்விக் வால்டன், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

Editor:

This website uses cookies.