இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி முடித்து உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக 5 புதிய வீரர்கள் இந்திய அணியில் களமிறக்கப்பட்டார்கள். 1980க்குப் பின்னர் இப்படி அதிக வீரர்கள் ஒரு ஒருநாள் போட்டியில் களம் இறக்கப்பட்டது இதுவே முதல் முறை. அதன்படி இந்திய அணியில் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சஹர், கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சேத்தன் சகாரியா இவர்கள் அனைவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் முறையாக ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆரம்பத்தில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடினாலும் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக விக்கட்டுகள் ஒரு பக்கம் சரிய இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதற்கு பின்னர் விளையாடிய இலங்கை அணியின் மற்ற வீரர்கள் பெர்னாண்டோ மற்றும் ராஜபக்ச மிக அற்புதமாக விளையாடி அரைசதம் குவிக்க இறுதியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஒரு தோல்விக்கு தோன்றிவிடும் வீரர் ராகுல் டிராவிட் கிடையாது
இந்நிலையில் இந்தப் போட்டியின் முடிவு குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா, ஒரு தோல்விக்கு பயந்து விடும் வீரர் அல்லது ஒரு தோல்விக்கு துவண்டுவிடும் வீரர் ராகுல் டிராவிட் கிடையாது.
3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில் மீதமுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ராகுல் டிராவிட் இந்த முடிவினை கையாண்டார். அவர் ஐந்து புதிய வீரர்களை அந்த போட்டியில் விளையாட வைத்தது மிகவும் சரியான முடிவு. தொடரை கைப்பற்றி விட்டதால் தைரியமாக அந்த முடிவை அவர் எடுத்தார்.
அந்தப் போட்டியின் முடிவு தோல்வியில் முடிவடைந்து இருந்தாலும், ராகுல் டிராவிட் அந்த வீரர்களின் ஆட்டத்தை நன்கு ஆராய்ந்து இருப்பார். இந்த ஒரு போட்டியில் தோல்வி அவரை எந்த விஷயத்திலும் பாதிக்காது என்று இறுதியாக ரமீஸ் ராஜா கூறி முடித்தார்.