முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அவரது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை என இரு பெரும் தொடர்களை எதிர்கொள்ள உள்ளது.
இதில் இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (08-08-2022) அறிவிக்கப்பட உள்ளது.
ஆசிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற போவது யார் யார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அவரது இந்திய அணியையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்துடன் கேஎல் ராகுலை தொடக்க வீரராகவும், 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் என கண்டிப்பாக டாப் 4ல் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ள சோப்ரா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் தேர்வு செய்யவில்லை.
ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, சாஹல் ஆகிய மூவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோருடன் 23 வயது இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங்கையும் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.