இந்த 11 வீரர்கள் இருந்தால் பஞ்சாப் அணியை வீழ்த்தவே முடியாது; சிறப்பான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர்
ஐ.பி.எல் தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.
வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐ.பி.எல் தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கிரிஸ் கெய்ல் மற்றும் கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஷேன் மார்ஷ், டேவிட் மில்லர், யுவராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். முன்னாள் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதே போல், சுழற்பந்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் பியூஸ் சாவ்லா, அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பிரவீன் குமார் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயவர்த்தனே, கிரிஸ் கெய்ல் போன்ற வீரர்களை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்திருந்தாலும், பஞ்சாப் அணியின் வளர்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர்களான சேவாக், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்களை தேர்வு செய்யாமல் புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்சியை கொடுத்துள்ளது.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பஞ்சாப் அணியின் ஆல் டைம் சிறந்த ஆடும் லெவன்;
கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், ஷான் மார்ஷ், மஹேலா ஜெயவர்தனே(கேப்டன்), டேவிட் மில்லர், யுவராஜ் சிங், பியூஷ் சாவ்லா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரவீன் குமார், சந்தீப் ஷர்மா.