வாய்ப்பு கிடைக்கலைன்னு கவலைப்படாதீங்க..நிச்சயம் உங்களுக்கு இந்திய முக்கியாமான தொடரில் வாய்ப்புள்ளது; உம்ரான் மாலிக் உள்ளிட்ட வீரர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !!

வாய்ப்பு கிடைக்கலைன்னு கவலைப்படாதீங்க..நிச்சயம் உங்களுக்கு இந்திய முக்கியாமான தொடரில் வாய்ப்புள்ளது; உம்ரான் மாலிக் உள்ளிட்ட வீரர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்..

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காத இவர்களுக்கு ஆசிய போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆசியாவிற்கான ஒலிம்பிக் கவுன்சில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹோங்சு மாகாணத்தில் நடைபெறுவதாக அறிவித்ததால் ஆசிய நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் அதற்கு தயாராகுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆசியாவில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும் ஆசியன் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனால் சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டியில் எந்த வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி பங்குபெறும் என்று இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2023 உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணி தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதால் இந்திய அணியில் எப்பொழுதும் விளையாடும் ரெகுலர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட பட்டாளத்தை சீனாவிற்கு அனுப்பும் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்து பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா., ஆசியன் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவிக்கையில்., எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கூட இந்திய அணியின் தேர்வாளர்களால் கவனிக்கப்படாத தீபக் சஹர்,நிச்சயம் ஆசிய போட்டிகளில் விளையாடுவார் என நம்புகிறேன். அதேபோன்று உம்ரன் மாலிக்கும் ஆசிய போட்டிகளில் பங்கேற்பார். ஏனென்றால் அவரை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது சந்தேகம் தான், அவரிடம் நல்ல வேகம் இருப்பதால் நிச்சயம் ஆசிய போட்டிகளில் அவரை இந்திய அணியில் பார்க்கலாம்”.

“மேலும் உலக கோப்பை தொடரில் அக்சர் பட்டெல், குல்தீப் யாதவ்,ரவீந்திர ஜடேஜா மற்றும் சஹால் உள்ளிட்ட வீரர்கள் இருப்பதால் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய்க்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் தான், எனவே அவரும் ஆசிய போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இவர்களை தவிர்த்து மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்திக்கும் ஆசிய போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார்” என ஆசிய போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ள வீரர்களை ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.