அவர எதுக்குடா டீம்ல எடுக்குறீங்க; சென்னை அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !!

எந்த பயனும் இல்லாமல் கேதர் ஜாதவுக்கு சென்னை அணி ஏன் தொடர்ந்து அணியில் கொடுத்து வருகிறது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கில்லியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.

தொடர் துவங்குவதற்கு முன்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற முக்கிய வீரர்கள் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், அணியில் இருக்கும் கேதர் ஜாதவ் போன்ற சில வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி வருவது சென்னை அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் மிகப்பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது.

பந்தும் வீசாமல், பேட்டிங்கிலும் மிக மோசமாக செயல்பட்டு வரும் கேதர் ஜாதவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏன் அணியில் எடுத்து வருகிறது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்பொழுது இதே கேள்வியை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா “காயம் காரணமாக விலகியுள்ள டூவைன் பிராவோவிற்கு பதிலாக ஹசில்வுட்டை எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். கேதர் ஜாதவிற்கு சென்னை அணிக்கு எதற்காக வாய்ப்பு கொடுத்து வருகிறது என்பது எனக்கும் தெரியவில்லை. அவருக்கான பேட்டிங் பொஸிசனும் அணியில் சரியாக இல்லாத பொழுது சென்னை அணி ஏன் இப்படி செய்கிறது என்பது தெரியவில்லை. கேதர் ஜாதவிற்கு பதிலாக கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்த்து கொண்டு எதிரணிகளுக்கு தொல்லை கொடுக்கலாம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.