சம்மந்தமே இல்லாம சஞ்சு சாம்சனுக்கு எதுக்குடா டீம்ல இடம்…? கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் !!

சம்மந்தமே இல்லாம சஞ்சு சாம்சனுக்கு எதுக்குடா டீம்ல இடம்…? கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டது ஏன் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி 20ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான இந்த தொடர் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டது ஏன் என எனக்கு தெரியவில்லை. சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் எந்த இடத்தில் இடம் கொடுப்பார்கள். மூன்றாவது இடத்தில் விளையாட ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார், நான்காவது இடத்திற்கு சூர்யகுமார் யாதவும், ஐந்தாவது இடத்திற்கு ரிஷப் பண்ட்டும் உள்ளனர். எனவே சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடமே கொடுக்க முடியாது. விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷனும், ரிஷப் பண்ட்டும் இருக்கின்றனர், இப்படி இருக்கையில் எதற்காக சஞ்சு சாம்சனுக்கு காரணமே இல்லாமல் இடம் கொடுத்தார்கள் என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.