இந்த விஷயத்தில் சிஎஸ்கேவை விட இந்த டீம் தான் பெஸ்ட்; முன்னாள் இந்திய வீரர் கருத்து!

சுழல் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சென்னை அணியை விட இந்த அணி வீரர்கள் தான் பெஸ்ட் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் கணிப்புகளும் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.

யார் கோப்பையை வெல்வார்? யார் அதிக ரன்கள் எடுப்பார்? யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்? எந்த அணி பந்து வீச்சில் சிறந்தது? எந்த அணி பேட்டிங் சிறந்தது? என பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறித்து தனது ஒப்பீடு மற்றும் கணிப்பு இரண்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

“உண்மையில், இந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறந்த அணியாக இருக்கிறது. பேட்டிங், சுழல் பந்துவீச்சு, வேகப் பந்துவீச்சு என அனைத்திலும் சிறந்த அணியாக விளங்குகிறது. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பேட்டிங்கில் பிரித்திவி சா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கின்றனர். சிறந்த பினிஷர்கள் இல்லாமல் அந்த அணி கடந்த சில ஆண்டுகளாக தவித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஹெட்மையர், அலெக்ஸ் கேரி, ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்து இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சுழல்பந்து வீச்சில் சென்னை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும். ஆனால் இந்த ஆண்டு டெல்லி அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின், சந்திப் லமிச்சானே, அக்சர் பட்டேல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் இருக்கின்றனர்.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் குறைந்தபட்சம் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் விளையாடுவர். இதனால் அனைத்து இடங்களிலும் டெல்லி அணி பலம் மிக்கதாக காணப்படுகிறது. இதைப் பார்க்கையில் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவை அனைத்தையும் வைத்துதான் டெல்லி அணி சிறந்தது என நான் குறிப்பிடுகிறேன்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.