இந்திய அணி வரும் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 3ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடர் கண்டிப்பாக நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துவிட்டன.
இந்நிலையில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களின் பெயரை சொல்லி அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய தொடரின் போது இடம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்…
ஹர்திக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலிய தொடரின் போது ஆடமாட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 8 மாதங்களாக அவர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடவில்லை. தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
மேலும் தற்போதைய இந்திய டெஸ்ட் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா இன்னும் பந்து வீச துவங்கவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அவர் பெரிதாக விளையாடவில்லை. இந்திய டி20 போட்டியில் மட்டும் ஆடலாம்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவிற்கும் இடம் கிடைக்காது. ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் விராட் கோலி தேர்ந்தெடுப்பார் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் ஒரே அணியில் ஒரே நேரத்தில் ஆட வைக்க முடியாது இது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த இருவருக்கும் அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார் அவர்.