ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இல்லை… ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இந்த வீரர்கள் கையில் தான் உள்ளது; ஆகாஷ் சோப்ரா அதிரடி தேர்வு
முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை அரையிறுதி சுற்றுக்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 5ம் தேதி துவங்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரும் பலமாக இருக்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. என்னை பொறுத்தவரையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசேன், மிட்செல் மார்ஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியை நிச்சயமாக அரையிறுதி சுற்றுக்கு அழைத்து செல்வார்கள் என நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால், நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே ஆபத்தான அணியாக இருக்கும். நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல” என்று தெரிவித்தார்.