ஆஸ்திரேலிய தொடரில் இந்த இரண்டு இளம் வீரர்களுக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்! ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்கு அட்வைஸ்!
இந்திய அணி இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தபோது அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது. இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை . அங்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன் முதலாக தொடரை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியது.
இந்நிலையில் இந்த வருடமும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சென்ற வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அணியில் இல்லை.
இந்த முறை கண்டிப்பாக அவர்கள் இருப்பார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி வலுப்பெற்றுள்ளது. அதேபோல் இந்திய அணியையும் இன்னும் வலுவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன்காரணமாக இரண்டு இளம் வீரர்களை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்…
இந்திய ஒருநாள் அணியில் நன்றாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பாக டெஸ்ட் அணியிலும் இடம் பெறவேண்டும். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார். சராசரியாக 55 வைத்திருக்கிறார். இவரை சேர்ப்பதால் அணிக்கு பலம் கூடும் மேலும் சுழற்பந்துவீச்சாளர் சாகல் இடம்பெறவேண்டும். குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை ஈடுபடவில்லை என்றால் இவரும் உதவுவார் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.