சஞ்சு சாம்சன் இல்லை,இந்த இளம் வீரருக்கு இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை கொடுக்கவேண்டும் ; ஆகாஷ் சோப்ரா கோரிக்கை
வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் நிலையான ஒரு இடத்தை கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பேசுபொருளாக திகழ்கிறார்.
காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடமலிருந்த வாஷிங்டன் சுந்தர், மீண்டு வந்து இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜடேஜா இல்லாததால்,இந்திய அணி ஒரு நல்ல சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் தவித்து வருகிறது என்ற குறையை போக்கும் வகையில் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் இருந்ததாக பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் அதிகப்படியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் எனவும் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சனமான ஆகாஷ் சோப்ரா, வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி அதிகமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,“இந்திய அணி வாஷிங்டன் சுந்தருக்காக ஒரு நிலையான இடத்தை கொடுக்க வேண்டும், அவரை சரியாக முறையில் பயன்படுத்தினால் அவர் காயம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம், வாஷிங்டன் சுந்தர் தற்போது தான் மிகப்பெரிய காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், இவர் தற்பொழுது போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ராக்ஸ்டாராக திகழ்ந்துள்ளார். அவருடைய திறமை மற்றும் கிரிக்கெட் அறிவு என அனைத்தும் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாருக்கு இருப்பது போன்றே உள்ளது.
முதலில் இந்திய அணி ஜடேஜாவை மட்டும் ஆல்ரவுண்டராக அணியில் வைத்திருந்தது, பின் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பை கொடுத்தது, அதற்குப்பின் அஸ்வினையும் அணியில் சேர்த்துக் கொண்டது. என்னைப் பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். மற்றவர்களைப் போல் ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு விட்டு மற்ற போட்டிகளில் மோசமாக விளையாடும் வித்தைக்காரர் போல் இல்லாமல் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார்,” என வாஷிங்டன் சுந்தரை ஆகாஷ் சோப்ரா பாராட்டி பேசிருந்தது குறிப்பிடத்தக்கது.