ஏண்டா அந்த மனுஷன இப்படி நோகடிக்கிரிங்க..? பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் !!

ஏண்டா அந்த மனுஷன இப்படி நோகடிக்கிரிங்க.. பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறாமல் போனதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள் என்று இந்திய அணி தேர்வாளர்களை ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோசமாக விளையாடிய வீரர்களை எல்லாம் அணியில் வைத்துவிட்டு சிறப்பாக விளையாடும் வீரர்களை அணியிலிருந்து வெளியே வைப்பதையே இந்திய அணி வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று விமர்சிக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சனின் நீக்கம் ரசிகர்கள் உட்பட முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு வரை டி20 போட்டியில் விளையாடி வந்த சஞ்சு சம்சனை ஆசிய கோப்பையில் இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கு பின் நடைபெற்ற உலகக்கோப்பையிலும் இவரை தேர்ந்தெடுக்கவில்லை.

மோசமாக விளையாடும் வீரர்களை எல்லாம் அணியில் வைத்துவிட்டு சஞ்சு சாம்சன் போன்ற ஒரு அதிரடி வீரரை அணியில் இணைக்காமல் போனது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று கடுமையான விமர்சனம் எழுந்த பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அப்பாடா… ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்து விட்டார் என்று மனதை அமைதிபடுத்தினால்…அவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு கடுமையாக விமர்சித்தனர்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 30+ ரன்கள் எடுத்திருந்தார். அப்படியிருந்தும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

தொடரை தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை சஞ்சு சாம்சனுக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கொடுங்கள் என்று கூறுமளவிற்கு தற்பொழுது சஞ்சு சாம்சனுக்கான ஆதரவு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வட்டத்திலும் எழுந்து வருகிறது.

அப்படியிருந்தும் டிசம்பர் 4ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. பிசிசிஐயின் இந்த செயல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதனால் இந்திய அணியின் தேர்வை கடுமையாக விமர்சித்து ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா., சஞ்சு சாம்சனுக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இடம் கொடுக்காமல் போனதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிசிசிஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்,“நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் 9 வீரர்களை சொந்த மண்ணிற்கு அனுப்புகிறீர்கள். மற்ற வீரர்கள் அனைவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் பங்கு பெறுவதற்காக செல்கிறார்கள். ஒரு தொடரில் இருந்து மற்றொரு தொடருக்கு 12 வீரர்களை மாற்றுகிறீர்கள் 11 புது வீரர்களை அணியில் இணைக்கிறீர்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் எங்காவது நடந்தது உண்டா…? சூரியகுமார் அதிகமான போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிவிட்டார் அவருக்கு ஓய்வு கொடுக்கிறீர்கள் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சஞ்சு சம்சனுக்கு ஏன் ஓய்வு, அவர் அப்படி என்ன விளையாடிவிட்டார்.

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனை அணியில் சேர்த்தீர்கள் பின்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் ஏன் இடம்பெற்றுள்ளார்..? இப்படி ஒருநாள் தொடரில் அதிகப்படியான வீரர்களை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம், குல்திப் யாதவ், சஹால் ஆகிய இருவரையும் சேர்ந்து விளையாட வைக்கவில்லை என்றால் அவர்களை ஏன் அணியில் இனைக்கிறீர்கள்..? குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா,மற்றும் சுப்மன் கில் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்..?” என்று இந்திய அணியை சரமாரியாக ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.