ஹேண்ஸ்கோம்ப் இந்தியா வருகை
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சுக்கு மாற்றாக பீட்டர் ஹேண்ஸ்கோம் அழைக்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயம் காரணமாக ஆரோம் ஃபின்ச் தொடரில் இருந்து விளகியுள்ளார்.
முன்னதாக வாரியத் தலைவர் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் காயம் காரணமாக ஆரோன் பின்ச் பங்கேற்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ஹில்டன் கார்ட்ரைட் தொடக்க வீரராக களம் கண்டார்.
சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் விளகினார். சென்னையில் நடபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரலிய அணி போர்டு ப்ரெசிடென்ட் அணியை எதிர்த்து விளையாடியது.
பின்ச் காயம்
ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆரோன் பின்ச் கனுக்கால் காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் இருந்து விளகியுள்ளார்.
இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியான சர்ரி அணிக்காக ஆடிய போது அவர் காயம் அடைந்துள்ளார்.
மேலும் காயம் ஆகிவிடக் கூடது என, முன்னெச்சரிக்கையாக பயிற்சி ஆட்டத்தில் இருந்து விளகியுள்ளார் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணி முன்னரே, முன்னனி வேகப்பந்து வீச்சளர்கள் ஜோஷ் ஹசல்வுட் மற்றும் மிட்ச்செல் ஸ்டார்க் ஆகியோரின் காயத்தால் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆரோன் பின்ச்சின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த தலைவலியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதற்க்கு மேலும், ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான் ஹில்டன் கார்ட்ரைட் இன்று நடந்த பயிற்சி சீசனில் பங்கேற்க்கவில்லை.
“ஆரோன் நேற்றிரவு பயிற்சிக்கு முன்பாக தனது முன்பே இருக்கும் கனுக்கால் காயத்தை மறுபரிசீலனை செய்தார்” ஃபிசியோதெரபிஸ்ட் அலெக்ஸ் கௌண்டோர்ஸ் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேட்ச்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கொல்டர் நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், க்ளென் மாக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் சாம்பா .
ஆஸ்திரேலிய டி 20 அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேட்ச்), டேவிட் வார்னர், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், டான் கிறிஸ்டியன், நாதன் கொல்டர் நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ட்விவிஸ் ஹெட், மோயஸ் ஹென்றிஸ், க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களது ஒரு நாள் போட்டி அணி வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
சவாலான வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துள்ளோம்.
டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு அதிகமாக எடுபடும்.
ஆனால் அந்த அளவுக்கு ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் இருக்காது என்று நினைக்கிறேன். ஃபின்ச்சுக்கு
ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கும் என்பதை அறிய காத்திருக்கிறோம்.