ஆஸ்திரேலியா உள்ளூர் டி20 அணியான மெல்பர்ன் ரெனகேட்ஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஆரோன் பின்ச் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடம் நீடித்துள்ளது.
31 வயதாகும் பின்ச் 2009-10 ஆண்டுக்கான சீசனில் மெல்பர்ன் அணிக்கு 6வது வீராக களமிறங்குவார். ஒருமுறை ஓபெர்ட் அணிக்கெதிரான போட்டியில், ஹோட்ஜ் உடன் இனைந்து முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்தார். அப்போதிருந்து வாழ்க்கையே மாறியது.
அதன் பிறகு, ஆஸ்திரேலியா அணிக்காக லிமிடெட் ஓவர்களில் இணைந்தார். துவக்க வீரராகவே களமிறங்குவார். ஆனால் எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இறங்கும் வல்லமை படைத்தவர் பின்ச். துவக்கம் என்றாலும் சரி, 6வது என்றாலும் சரி அதிரடி தான். தற்போது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸி. கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபிஞ்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தினார். இதற்க்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோரான 156 ரன்களும் இவர் அடித்ததே.
இதே நிலையை அடுத்து வரும் சீசனிலும் தொடருவார் என்று ஒப்பந்தத்தை 2 வருடம் நீடித்தது மெல்பர்ன் அணி. மேலும், ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் ஆன கிறிஸ்டின் இன்னும் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளார்.