இவரது பந்து வீச்சை கண்டு நான் பயந்து இருக்கிறேன்! ஆரோன் பின்ச் என்று விளக்கம்!

ஆரோன் பின்ச் 2011ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 132 மேட்சுகளில் விளையாடி 5232 ரன்கள் குவித்திருக்கிறார். அதேசமயம் 71 டி20 போட்டிகளில் விளையாடி 2346 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைமை தாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது தலைமையின் கீழ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2019 நடந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது. தற்போது சமூக வலைதளங்களில் காணப்பட்ட ஆரோன் பின்ச் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நான் சந்திக்க பயன்படும் ஒரு பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தான்

அதில் ஒரு கேள்வியாக நீங்கள் சந்திக்க அல்லது ஒரு பந்து வீச்சாளரின் பந்தை மேற்கொள்ள சிரமப்பட்டு உள்ளீர்கள் என்றால் அது யார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள ஆரோன் பின்ச் அது சயீத் அஜ்மல் தான் என்று கூறியிருக்கிறார். பிஞ்சு மட்டுமல்ல முன்னணி வீரர்களான டுப்லஸ்ஸிஸ் குமார் சங்ககாரா மற்றும் ஜோ ரூட் ஆகிய வீரர்களும் இவரது பந்துவீச்சை மிகவும் சிரமமாக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணிக்காக 2015ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள சயீத் அஜ்மல் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கட்டுகளையும் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும் 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

பாகிஸ்தான் தேர்வு கொள்கையை கண்டித்து அஜ்மல்

பாகிஸ்தான் அணியில் தற்பொழுது யாசிர் ஷா நீக்கப்பட்டுள்ளார். இதைக்கண்டு அஜ்மல் பாகிஸ்தான் தேர்வுக்குழுவை கடுமையாக கண்டித்துள்ளார். சமீபகாலமாக மிக சிறப்பாக விளையாடி வரும் அவரை எதற்காக அணியில் இருந்து நீக்கினார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கே பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஜூலை மாதத்தில் ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுக்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.