மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் ஏபி டிவில்லியர்ஸ்! கெத்தாக அறிவித்த மிஸ்டர் 360 டிகிரி!
தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரராக இருப்பவர் ஏபி டிவிலியர்ஸ். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். திடீரென வந்த அறிவிப்பால் அவரது ரசிகர்களும், கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடாமல் தொடர்ச்சியாக ஐபிஎல் மற்றும் பிக்பாஸில் போன்ற இடங்களில் ஆடிக்கொண்டிருந்தார். இவர் சென்ற பின்னர் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விதமான போட்டிகளிலும் அடிவாங்கியது. தொடர்ந்து இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என அனைத்து அணிகள் இடமும் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து கொண்டே இருந்தது.
அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த டு பிளசிஸ் ராஜினாமா செய்தார். மீண்டும் ஏபி டிவிலியர்ஸ் அணிக்கு வரவேண்டும் என்று அவரரே கூறினார். தென் ஆப்பிரிக்காவின் வீரர்களும் நிர்வாகிகளும் இதனையே கூறிவந்தனர் .தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகியாக இருக்கும் கிரீம் ஸ்மித், ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறியிருந்தார் .
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த 3 நாட்களாக 3TC என்ற ஒரு வித்தியாசமான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் துவங்குவதற்கான ஒரு அறிவிப்பாக விளையாடப்பட்டது.
இந்த போட்டியில் ஏபி டிவிலியர்சின் அணி கோப்பையை கைப்பற்றியது இதில் அவர் 24 பந்துகளில் 61 ரன்கள் விளாசி இருந்தார். இந்த போட்டி முடிந்த பின்னர் மீண்டும் தான் கிரிக்கெட்டிற்கு வர இருப்பதாக பேட்டி கொடுத்தார் ஏபி டிவிலியர்ஸ்/ அவர் கூறுகையில்…
நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், என்ன எதிர் பார்ப்பது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சில மாதங்களாக சரியான முறையில் விளையாட முயற்சி செய்து வந்தேன். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் .
இதன் காரணமாக மீண்டும் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி விடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.