என்னையே கதிகலங்க விட்டுட்டாங்க… நான் ஆடியதிலேயே என்னை அச்சுறுத்திய 3 பவுலர்கள் இவர்கள் தான்! – ஏபி டி வில்லியர்ஸ்!

நான் எதிர்கொண்டதிலேயே என்னை அச்சுறுத்திய 3 பவுலர்கள் இவர்கள் தான் என்று பேசியுள்ளார் மிஸ்டர் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல வித்தியாசமான ஷாட்டுகள் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்து, பல வருடங்களாக தனது அதிரடியின் மூலம் பல்வேறு ரசிகர்களையும் பெற்றுள்ள ஏபி டி வில்லியர்ஸ், எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யக்கூடியவராக இருந்தார்.

குறிப்பாக டெத் ஓவர்களில் இவருக்கு பந்து வீசுவது எந்தவொரு பவுலருக்கும் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்த நிலையில், தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் அச்சுறுத்திய மூன்று பவுலர்கள் யார் யார் என்பதை பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு ஷேன் வார்னே பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. 2006ம் ஆண்டு நான் ஆஸ்திரேலியாவிற்கு தென் ஆப்பிரிக்கா அணியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டது. சில நேரங்களில் பந்து நேராக வரும் என்று எதிர்கொண்டால் மிகவும் விலகிச் சென்று ஆட்டமிழக்க நேரிடும். அதேபோல் விலகி வரும் என்று உள்ளேயே நின்று எதிர்கொண்டால் திடீரென போல்ட் ஆகிவிடுவோம். இவரது பந்துவீச்சை என்னுடைய ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொள்வதற்கு அச்சப்பட்டேன்.” என்று டிவில்லியர்ஸ் சொன்னார்.

“இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பௌலிங்கை டெத் ஓவரில் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எந்த நேரத்தில் யார்கர் வரும் என்று கணிப்பதே மிகவும் சிரமம். அதிலும் இவரது பந்துவீச்சு ஆக்சன் கணிப்பதற்கு சிரமமாக இருக்கும். அதை வைத்து இன்சுவிங் ஆகிறதா? அல்லது அவுட் ஸ்விங் ஆகிறதா? கணிக்க இயலாது. அதனால் ஆட்டமிழக்க நேரிடும். இவரது பந்துவீச்சும் என்னை அச்சுறுத்தியுள்ளது.” என்று டி வில்லியர்ஸ் பகிர்ந்து கொண்டார்.

 

“கடைசியாக ரஷித் கான் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் சிரமப்பட்டு இருக்கிறேன். கூக்ளி மற்றும் லெக்ஸ்பின் இரண்டும் ஒரே விதமாக வீசுவார். இவரை எதிர்கொள்ள சிரமப்பட்டதற்கு ஒரே காரணம் எந்த பந்து எப்படி வரும் என்பதை கணிக்க முடியாது. இரண்டிற்கும் ஒரே ஆக்சன் வைத்திருக்கிறார்.” என்றார்.

இவர்களது பந்துவீச்சை தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொள்ள நான் சிரமப்பட்டேன். இன்னும் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை ஓரளவிற்கு கணித்து விளையாட முடிந்தது. ஆகையால் பெரிதளவில் சிக்கலாக தெரியவில்லை என்று மிஸ்டர் 360 டிகிரி பேசினார்.

Mohamed:

This website uses cookies.