இந்த ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் இதுகுறித்து பேச இருக்கிறேன் என்று ஏபி டீவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை அணியும் இருக்கிறது.
தொன்னாப்பிரிக்கா வீரர் ஏபி டீவில்லியர்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்களும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்களும் குவித்து இருக்கிறார்.
டீவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் விளையாடி இரண்டு வருடங்களாகிறது. ஆனாலும் கூட தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர் டீவில்லியர்ஸ் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் அதற்காக தலைமை பயிற்சியாளர் மார்க்க பவுச்சரிடம் இந்த ஐபிஎல்லுக்கு பின் பேச இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டீவில்லியர்ஸ் பேசுகையில் “நான் டி20 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறேன். நான் தற்போது நல்ல பார்மில் இருக்கிறேன். இந்த ஐபிஎல் முடிந்த பிறகு மார்க் பவுச்சரிடம் பேசப் போகிறேன்.
கடந்த ஐபிஎல்லில் நீங்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட விரும்புகிறீர்களா என்று மார்க் என்னிடம் கேட்டார். அதற்கு நானும் சரி என்று சொன்னேன். இந்த வருடம் நானாகவே அவரிடம் இதுகுறித்து பேச இருக்கிறேன்” என்று டீவில்லியர்ஸ் பேசியிருக்கிறார்.