தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!! இது செம்ம ஆட்டம்!

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ்.

ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி, உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் சமயத்தில் வெளியானதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வந்தனர்

பின்னர் தன்னைப் பற்றிய இந்த சர்ச்சைக்கு ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர் தற்போது தான் இன்னும் நாட்டிற்காக விளையாட தகுதியுடன் உள்ளேன் என தனது பேட்டால் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆம், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கௌன்டி டி20 ஆட்டம் ஒன்றில் அரைசதம் விளாசியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

முன்னதாக முதல் பேட்டிங் செய்த எஸக்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து. நெதர்லாந்து வீரர் ரையன் டென் டோஷே ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய மிடில்செக்ஸ் அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் உடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ், ஆட்டமிழக்காமல் 6 இமாலய சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 43 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

மிடில்செக்ஸ் அணிக்காக முதல் 7 லீக் ஆட்டங்களில் பங்கேற்க ஏபி டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை அந்த அணி நாக்-அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெறும் பட்சத்தில் மீண்டும் அந்த அணிக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

Sathish Kumar:

This website uses cookies.