“நான் ஓய்வு பெற்றதற்கு இதுதான் காரணம்” – ஒரு வருடத்திற்குப் பிறகு உண்மையை வெளியிட்ட டிவில்லியர்ஸ்!!

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ்  தான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கான உண்மையான காரணத்தை சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறுக்கமுடியாத மிகச் சிறந்த வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் வழக்கமான முறையில் அல்லாது, பல வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடுவதில் கைதேர்ந்தவர். அதாவது இவருக்கு செல்லமாக மிஸ்டர் 360 என்ற பெயரும் உண்டு.

தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரராக திகழ்ந்த இவர் சில காலங்கள் கேப்டன் பொறுப்பிலிருந்து அதன் அழுத்தத்தை பொறுக்க முடியாமல் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு சக வீரராக விளையாடினார்.

அதன் பிறகு ஓரிரு தொடர்களை மட்டுமே விளையாடி அவர் கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதை கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் தொடர்ந்து பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போன்ற டி20 தொடர்களில் தொடர்ந்து ஆடி வருகிறார். மேலும் இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு நடக்க இருக்கும் பிக் பேஷ் லீக் டி20 தொடரிலும் ஆஸ்திரேலியா சென்று ஆடயிருக்கிறார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏன் இவ்வாறு திடீரென ஓய்வு முடிவை எடுத்தேன்? என்பது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உண்மையை வெளியிட்டுள்ளார் டி வில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸ் கூறுகையில், சுமார் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடி வருகிறேன். உண்மையில் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனது குடும்பத்தை சரிவர என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. இது எனக்கு மிகவும் அழுத்தம் தரக்கூடியதாக இருந்தது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்ததால் எனக்கு குடும்பத்துடன் செலவழிக்க நேரமில்லாமல் போனது. இதற்காகவே நான் ஓய்வு முடிவை திடீரென அறிவிக்க வேண்டியதாயிற்று என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.