இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கவேண்டிய டி20 உலக கோப்பை தொடர் தற்போது அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இது எல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும்.
ஆனால் வைரஸ் தாக்கத்திற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் என அனைத்திலும் ஆட தயாராக இருந்தார்கள் வீரர்கள்.குறிப்பாக மகேந்திர சிங் தோனி, ஏபி டிவிலியர்ஸ் போன்றவர்களுக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து இருந்தது.
ஏனெனில் இருவருமே தற்போது தங்களது நாட்டு அணிக்காக விளையாட வில்லை. இருவருமே ஓய்வு கட்டத்தை எட்டி விட்டார்கள். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு ஏபி டிவிலியர்ஸ் பெயரை அணியில் சேர்த்து வைத்து இருந்தோம் என்று அந்த அணியின் கேப்டன் குவின்டன் டி காக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ..
அவர் கண்டிப்பாக அணியில் இருந்தார். அவர் உடல் தகுதி நன்றாக இருந்தால் கண்டிப்பாக அவரை அணியில் சேர்ந்து விளையாட வைத்திருப்பேன். அணி வீரர்களும் அவரை அணியில் வரவேற்க தயாராக இருந்தார்கள். அவரை எப்படியாவது ஆட வைத்து விட வேண்டுமென்று தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் குவின்டன் டி காக்.
ஏபி டிவில்லியர்ஸ் கரண் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது எப்படியாவது அவரை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட வைத்து விட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.