ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று விளையாடும் போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் இல்லாமல் களமிறங்க போகிறது. காயம் காரணமாக இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் விளையாடமாட்டார். இந்த செய்தியை அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஐபில் 10 புள்ளி பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி இடத்தில் உள்ளது. இனி விளையாடும் அணைத்து போட்டிகளிலும் விளையாடினாள் தான் பிலே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. கடைசி போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் தோற்றதால், இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என முனைப்பில் உள்ளது.
ஆனால் இன்று குஜராத் லயன்சுடன் விளையாடும் போட்டியில், தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் இல்லாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட போகிறது.
ஐபில்-இன் ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியா தொடரின் போது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட விராட் கோலி , இந்த ஐபில் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் வந்தது.
ஆனால், விராட் கோலியின் உடல்நலம் தேறிக்கொண்டு வருகிறது. அவர் இன்னும் ஓரிரு வாரத்தில் ஐபில்-இல் விளையாடுவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியது. காயம் காரணத்தினால் பெங்களூருக்காக முதல் மூன்று போட்டிகள் விராட் கோலி விளையாடவில்லை.
கோலி காயத்தில் இருந்து வெளிவந்தாலும், தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் காயம் சீரடைய லண்டனின் சிகிச்சை பெற்று வந்தார்.அவரால் இன்னும் 8 வாரம் விளையாடமுடியாது எனவும் கூறினர்.
முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த டி வில்லியர்ஸ் பெங்களூருக்காக முதல் இரண்டு போட்டிகள் விளையாடவில்லை. இந்த மூன்று நட்சத்திர வீரர்கள் இல்லாமல், முதல் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது பெங்களூரு அணி.
குஜராத்திற்கு எதிரான போட்டியில் டி வில்லியர்ஸ் இல்லாததால், அவருக்கு பதிலாக மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் அல்லது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவராகள் என எதிர்பார்க்க படுகிறது.