இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க அணியும் நட்சத்திர வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் இருவரும் சம காலத்தில் ஆடம் இரு அற்புதம் வாய்ந்த வீர்ரகள். இருவருமே தங்கள் அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்தவர்கள்.
பல ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் இருவரும் ஒன்றாக ஓர் அணியில் ஆடியவர்கள். பெங்களூரு அணியில் விராட் கோலியின் தலைமையில் ஆடியவர் ஏ.பி.டி வில்லியர்ஸ். இருவருமே நல்ல நண்பராகள். ஒரே மைதானத்தில் பல போட்டிகளில் ஒரே அணிக்காக ஆடியவர்கள்.
ஆனால் தற்போது ஒரே மைதானத்தில் எதிர் எதிராக வேறு வேறு அணிக்காக ஆடப் போகிறார்கள். இங்கு தான் ஆட்டம் ஆரம்பமே. வரும் ஜனவரி 5ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி துவங்கும் முன்னர் இரு அணிகளும் வார்த்தை யுத்தத்தை துவங்கி உள்ளது. முதலில் தென்னாப்பிரிக்க அணியிஜ் நட்சத்திர வீரர் விராட் கோலியின் நண்பர் டி வில்லியர்ஸ் விராட் கோலியை சூசகமாக எச்சரித்தார்.
அதாவது விராட் கோலி இங்கு வந்த பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வருவார். ஆனால் நாங்கள் இங்கு எதற்கு இருக்கிறோம் எனக் கூறி கோலியை வம்பிழுத்தார்.
தற்போது டி வில்லியர்ஸ் கூறிய இந்த வார்த்தை யுத்தத்திற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
டி வில்லியர்ஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் பல போட்டிகள் ஒரே மைதானத்தில் ஆடியுள்ளோம். ஆனால் தற்போது ஆடப் போவது எதிராக ஆடப் போகிறோம். டி வில்லியர்ஸ் என்னை விக்கெட் எடுக்க தான் பார்ப்பார். ஆனதும் அவரை. விக்கெட் எடுக்க தான் பார்ப்பேன். நான் என்ன நினைக்கிறேனோ அதனை தான் ராகானேவோ அல்லது புஜராவோ நினைப்பார்கள்.
ஆனால் டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆடி இரண்டு வருடம் ஆகிவிட்டது. அவர் எப்படி ஆட போகிறார் என்று தெரியவில்லை. இதனால் போட்டியை வெல்ல நமக்கு சற்று வாய்புகள் அதிகம் உள்ளது.
எனக் கூறினார் விராட் கோலி.