31 வயதான விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்! கோலியின் ஓய்வு குறித்து வெளியான செய்தி ரசிகர்கள் அதிர்ச்சி!

‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’ என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

‘இந்த ஊரடங்கு கூட விராட் கோலிக்கு நல்லதாக இருக்கலாம். இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் விராட் கோலியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்’ என்றார். ‘ஒரு பேட்ஸ்மேனாக கோலி என்னை விட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் களம் கண்டால் 15 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று விரும்புவார்’ என்றும் குறிப்பிட்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து டிவில்லியர்ஸ் வெளியிட்டார். அந்த அணிக்கு டோனியை கேப்டனாக நியமித்துள்ளார். அவரது ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:- ரோகித் சர்மா, ஷேவாக், விராட் கோலி, டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரஷித்கான், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, காஜிசோ ரபடா.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிவில்லயர்ஸ் நிரந்தர ஐபிஎல் 11 அணியைத் தேர்வு செய்ய ஒப்புக்கொண்டார். 11 வீரர்களில் கட்டாயம் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும் எனவும் அதில் டிவில்லயர்ஸின் பெயரும் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கும், ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்தார்.

\
Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI

இதற்கு அடுத்தபடியாக அணியின் மூன்றாம் வீரராக பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலியை தேர்வு செய்தார். பின்பு நான்காம் இடத்திற்கு மொத்தம் மூன்று வீரர்களை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தார். கேன் வில்லயம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிவில்லயர்ஸ். இதில் யாராவது ஒருவரை நான்காம் இடத்தில் களமிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது அணியின் கேப்டனாக தோனியை தேர்வு செய்து 5 ஆவது பேட்ஸ்மேனாக நியமித்தார்.

பின்பு அடுத்தடுத்த இடங்களில் ரவிந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், ரபாடா மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பின்பு தோனியை கேப்டனாக்கியதை குறித்து பேசிய டிவில்லியர்ஸ் “என்னுடைய 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணிக்கு தோனிதான் எப்போதும் நிரந்தர கேப்டன்” எனத் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.