தோத்துருவோம்னு பயம் இருக்கனும், அப்ப தான் எல்லா சரியாக நடக்கும் ; கோலிக்கு முறைமுக அறிவுரை ! – ஏபி டீவில்லியர்ஸ்

14வது ஐபிஎல் சீசனின் 6வது லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் குவித்து இருக்கின்றனர். இதில் மேக்ஸ்வெல் 59 ரன்கள் மற்றும் கோலி 33 ரன்கள் குவித்து இருக்கின்றனர். இதயைடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி வீரர் ஏபி டீவில்லியர்ஸ் இந்த போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருக்கிறார். ஆனால் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ஏபி டீவில்லியர்ஸ் 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மிடில் ஆர்டரில் கள்மிறங்கிய இவர் ஆர்சிபி அணியை தனியாளாக வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து, செய்தியாளரிடம் பேசிய ஏபி டீவில்லியர்ஸ் தோல்வியின் பயம் தான் என்னை பந்தை கணிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஏபி டீவில்லாயர்ஸ் “மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது நிலைமை எப்படி வேண்டுமென்றாலும் மாறும்.

அப்போது நாம் அதற்கு தகுந்தவாறு மாறி விளையாட வேண்டும். நாம் தோற்பது உறுதி என்று தெரிந்த பிறகு தான் நான் பந்தை கூர்மையாக கவனித்து விளையாடுவேன். அந்த பயம் தான் என்னை பந்தை கணிக்க வைக்கிறது” என்றார்.

மேலும் பேசிய அவர் “நான் கடந்த ஐபிஎல்லுக்கு பிறகு மீண்டும் பழைய பார்முக்கு வர கஷ்டப்பட்டேன். நான் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே என்னை தயார் செய்து வந்தேன். மேலும், 2-3 மாதங்கள் ஜம்மில் வொர்க்அவுட் செய்தேன். இது எனது பழைய நிலைமைக்கு வர உதவியது” என்று கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.