சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அப்துல் ரசாக்

பாகிஸ்தானின் சிறந்த ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தார்.

ஜிம்பாபேக்கு எதிராக 1996-இல் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய அப்துல் ரசாக், கடைசியாக 2013-இல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டி20 தொடரும், 2011-இல் ஒருநாள் போட்டியும் விளையாடினார்.

அதுமட்டும் இல்லாமல், பாகிஸ்தானுக்காக கடைசியாக 2006-இல் டெஸ்ட் போட்டி விளையாடினார். அதற்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ரசாக். இந்நிலையில், இனி வாய்ப்பு வராது என நினைத்த அப்துல் ரசாக், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

“நான் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம். நான் கிரிக்கெட் விளையாடி 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது, இதனால் நான் திரும்பி பாகிஸ்தானுக்காக விளையாடுவது சந்தேகம் தான்,”” என ரசாக் கூறினார்.

“என்னை அணியில் விட்டு தூக்கிய பிறகு, நான் விடவில்லை. கடுமையாக பயிற்சி எடுத்தேன். நான் என்னுடைய பயிற்சியை தொடர்ந்திருந்தால், நான் என்னுடைய இடத்தை பிடித்திருப்பேன். ஆனால் உள்ளே நாடாகும் அரசியலால் நான் சோர்வாகிவிட்டேன்,” என மேலும் அவர் கூறினார்.

ஆனால், முதல்-நிலை மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என கூறினார்.

“நான் உள்ளூர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதை தொடர்வேன் மற்றும் SNGPL என்னும் அணிக்கு விளையாட போகிறேன். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நான் பயிற்சியாளராக இருப்பதால், என்னால் அங்கு விளையாட முடியாது,” என ரசாக் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தேவை பட்டால் நான் மெண்டராக செயல் படுவேன்.

மேலும்,”என்னுடன் விளையாடிய அப்ரிடி, மிஸ்பா, யூனிஸ், யூசப் ஆகியோர் ஓய்வு பெற்றனர். எனக்கும் இதுதான் சரியான நேரம்,” என கூறினார்.

46 டெஸ்ட் மற்றும் 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரசாக், 1946 மற்றும் 5080 ரன் அடித்துள்ளார். அத்துடன், 100 டெஸ்ட் விக்கெட் மற்றும் 269 ஒருநாள் விக்கெட் எடுத்துள்ளார். 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 393 ரன் அடித்து, 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.