2007ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு காலம் வரை அப்துர் ரஹ்மான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்பின் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுகை ஸ்பின் பவுலரான இவர் பல போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
தற்பொழுது இவர் பாகிஸ்தான் அணியில் விளையாடிய மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் கொண்டு, எல்லா வகையிலும் தலை சிறந்த அணி இதுதான் என்று ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த அணியில் பங்கு பெற்றுள்ள வீரர்களைப் பற்றி பார்ப்போம்
ஓபனிங் வீரர்களாக ஆமேர் சோஹேல் மற்றும் சையது அன்வர்
அவர் தேர்ந்தெடுத்துள்ள அணியில் ஓபனிங் வீரர்களாக சோஹேல் மற்றும் சையது அன்வரை தேர்ந்தெடுத்துள்ளார்.
சோஹேல் மிக நிதானமாக பொறுமையாக விளையாடக் கூடிய ஒரு பேட்ஸ்மேன், மறுபக்கம் சையது அன்வர் அதிரடியாக அடித்து விளையாட கூடிய ஒரு வீரர். இவர்கள் இருவரும் இணைந்து பாகிஸ்தான் அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய காரணத்தினால் இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இன்சமாம் உல் ஹக், முகமது யூசப், ஜவாத் மியண்டட் மற்றும் ரஷீத் லதீப்
மிடில் ஆடர் வரிசையில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகமது யூசப் ஜோடியை தேர்ந்தெடுத்து உள்ளார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்து 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் ஜாவத்தை தேர்ந்தெடுத்து உள்ளார். டெஸ்ட் போட்டியில் ஜாவட் 8000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் இவரது அவரேஜ் 50க்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ரஷீதை தேர்ந்தெடுத்து உள்ளார்.
ஆல்ரவுண்டர் வீரராக இம்ரான் கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரை ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் என்றால் அது நிச்சயமாக இம்ரான் கான் தான். எனவே இவரை தனது டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர் வீரராக தேர்ந்தெடுத்து உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் ஆக வாசிம் அக்ரம், அக்தர், சக்ளின் முஷ்டாக் மற்றும் அப்துல் காதிர்
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் வாசிம் அக்ரம் மற்றும் அக்தரை இவர் பாகிஸ்தான் அணியில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஒப்பீடு செய்து பார்த்தால் இவர்கள் இருவரும் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எனவே இவர்கள் இருவரையும் தனது அணியில் இணைத்துள்ளார். ஸ்பின் பவுலிங் போடக்கூடிய வீரர்களாக முஸ்தாக் மற்றும் அப்துல் காதிரை தேர்ந்து எடுத்து உள்ளார். இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துர் ரகுமான் தேர்ந்தெடுத்த 11 கிரிக்கெட் வீரர்கள்
ஆமேர் சோஹேல், சையது அன்வர், இன்சமாம் உல் ஹக், முகமது யூசப், ஜவாத் மியண்டட், ரஷீத் லதீப், இம்ரான் கான், வாசிம் அக்ரம், அக்தர், சக்ளின் முஷ்டாக் மற்றும் அப்துல் காதிர்.
அப்துர் ரஹ்மான் அணியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த யுனிஸ் கான் மற்றும் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் ஆகிய இருவரை தனது டெஸ்ட் அணியில் இவர் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது