அஸ்வினை மட்டம் தட்டிப் பேசிய சஞ்சய் மாஞ்ச்ரேக்கர்! பதிலடி கொடுத்த அபினவ் முகுந்த்!

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில நாட்களுக்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர் கிடையாது என்றும், அவரை ஒரு தலை சிறந்த வீரராக தன்னால் தேர்ந்தெடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். இந்தியாவில் மட்டுமே அவர் மிக சிறப்பாக செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அவர் சிறப்பாக செயல்பட மாட்டார் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இதுபற்றி தற்பொழுது அபினவ் தனது தரப்பு விளக்கத்தை உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது தவறு என்றும், ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்றும் கூறியிருக்கிறார்.

சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து தொடரை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கவனிக்க வேண்டும்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுவதற்கு முன்பாக சென்ற ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதேபோல இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை தடம் பதித்திருக்கிறார்.

2 டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற மிகப்பெரிய அளவில் ரவிசந்திரன் அஸ்வின் உழைத்திருக்கிறார். அவரை இவ்வாறு கூறுவது சரியல்ல என்று அபிநவ் முகுந்த் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொள்ளும் ஒரு வீரர்

ரவிச்சந்திரன் எப்பொழுதும் தன்னுடைய விளையாட்டு முறையை வடிவமைத்து கொண்டே வருவார். நிறைய ஆராய்ச்சிகள் அவர் தனது பந்து வீச்சில் ஏற்படுத்திக் கொண்டு வருவார். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அவருடைய இலக்கு.

ரவிச்சந்திரன் அஸ்வின் 78 போட்டியில் விளையாடி 409 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் அதிவேகமாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரு வீரர். மேலும் இந்திய அளவில் கபில்தேவ், அணில் கும்ப்ளே மற்றும் அழுகிய தொடர்ந்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 4-வது வீரராக அவர் தற்பொழுது திகழ்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஒரு வீரரை சிறந்த வீரர் இல்லை என்று சொல்வது சரியல்ல என்றும், ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த பவுலர் என்று கூறியிருக்கிறார். மேலும் நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் மிக சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்குவார் என்றும் அபினவ் முகுந்த் உறுதியளித்திருக்கிறார்.

அபினவ் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதேசமயம் 145 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி 10,258 ரன்கள் குவித்துள்ளார். பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் அவரது பேட்டிங் அவரேஜ் 47.93 ஆகும் . அதில் 31 சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 84 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 12 சதங்களும் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அவரது பேட்டிங் அவரேஜ் 50க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.