அபுதாபியில் 3 நாட்கள் மட்டுமே நடக்கும் புதிய டி20 தொடர்… 6 அணிகள் பங்கேற்பு

அபுதாபியில் புதிய டி20 தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கின்றன. அக்டொபர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை வெறும் 3 நாட்கள் மட்டுமே நடக்க இருக்கின்றன.

முதல் சீசனில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன. இவர்களுடன் ஐக்கிய அரபு நாடுகல் அணியும் பங்கேற்க உள்ளன.

யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் இந்த தொடரில் பங்கேற்கிறார். மேலும், டைமல் மில்ஸ், கேரி பல்லன்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த தொடருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததுடன், உடன் நின்று போட்டிகளை நடத்தி தரவும் தயார் என தெரிவித்தது. மேலும், அரபு நாடுகள் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

பங்கேற்கும் அணிகள்:
  1. பூஸ்ட் டிபெண்டெர்ஸ் – ஆப்கானிஸ்தான்
  2. ஹொபேர்ட்ஸ் ஹரிகேன்ஸ் – ஆஸ்திரேலியா
  3. லாகூர் குலாண்டர்ஸ் – பாகிஸ்தான்
  4. மல்டிப்ளை டைட்டன்ஸ் – தென்னாபிரிக்கா
  5. யார்க்ஷைர் கவுண்ட்டி கிளப் – இங்கிலாந்து

ஆறாவது அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அரபு நாடுகள் கிரிக்கெட் வாரியத்தால் இனி தான் அறிவிக்கப்படும். அது அரபு நாடுகள் அநியாய தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Vignesh G:

This website uses cookies.