இங்கிலாந்து – ஆஸ்திரேலிய இடையே வியாழக்கிழமை நடந்த உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டதில் மைக்கேல் வாகனுக்கும், கில்கிறிஸ்ட்க்கும் மோதல் ஏற்பட்டது.
ஜேஸன் ராயின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சர், வோக்ஸின் துல்லியமான மிரட்டும் பந்துவீச்சு ஆகியவற்றால் பர்மிங்ஹமில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பைனலுக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து அணி.
இதில் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை முதல் 15 ஓவரிலேயே பந்தாடி கொண்டு இருந்தார்.
அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக வெறும் கால்களுடன் பந்து வீச வேண்டும் என்று பதிவிட்டார்.
இந்த ட்வீட்டை குறிப்பிட்டு ’முட்டாள்’ (இடியட்) என்று பதிவிட்டு ஆஸ்திரேய வீரர் கில்கிறிஸ்ட் மைக்கேல் வானை விமர்சித்தார்.
இதற்கு பதிலடியாக மைக்கேல் வான் வெறும் கால்களுடன் ஜிஃப்ஃபை பதிவிடுவார்.
இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறியதற்காக ட்விட்டரில் இவ்வளவு அநாகரிகமாக மைக்கேல் வான் நடக்கக் கூடாது என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுன் மோதி வெற்றிப் பெற்றது. இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.