இன்று கமெண்டரி செய்து கொண்டிருக்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி இருவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கில்கிறிஸ்ட்.
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பின்ச் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு விக்கெட் ஏதும் இழக்காமல் ரன்களை குவித்து வந்தனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த தொடக்கமாக அமைந்தது. வார்னர் மற்றும் பின்ச் இருவரும் அரைசதம் கண்டனர்.
முதல் விக்கெட்டுக்கு 150க்கு ரன்களுக்கும் மேல் அடித்த இந்த ஜோடியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். அப்போது முகமது சமி வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. அப்போது கமெண்டரி செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் தவறுதலாக சிராஜ் தந்தை இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக நவ்தீப் சைனியின் தந்தை இறந்துவிட்டார் என கூறினார். முதலில் இதை அறியாமல் அடுத்தடுத்து ஓவர்களுக்கு கமண்டரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென உண்மைத் தகவலை அறிந்துகொண்ட கில்கிறிஸ்ட் சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு நவ்தீப் சைனியின் தந்தை இறக்கவில்லை சிராஜ் தந்தை இறந்துவிட்டார் என உண்மையை தகவலையும் குறிப்பிட்டு பேசினார். அதற்குள் ரசிகர்கள் பலர் ட்விட்டர் பக்கத்தில் எப்படி தவறாக கமெண்டரி செய்யலாம்; உண்மைத் தகவலை அறியாமல் அதை எப்படி பேசலாம் என தங்களது விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இணையதளங்களில் சிறிதுநேரம் இதற்காக சலசலப்பு நேர்ந்தது என்றே கூற வேண்டும்.
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது களத்தில் பின்ச் 96 கண்களுடனும் ஸ்மித் 28 ரன்கள் எடுத்திருந்தனர். வார்னர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.